Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வேதாத்ரி மகரிஷி/மனத்தூய்மை வாழ்வு தரும்

மனத்தூய்மை வாழ்வு தரும்

மனத்தூய்மை வாழ்வு தரும்

மனத்தூய்மை வாழ்வு தரும்

ADDED : அக் 30, 2009 03:21 PM

Google News
Latest Tamil News

* நான் யார்? என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடம் ஏது?
* உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புமை இல்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.
* நானே பிரம்மாக இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீது ஆசை கொள்வது? பற்று வைப்பது? அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்றுகள் நம்மை விட்டு விலகுகின்றன.
* தன்னை அறிந்த நிலையில் உள்ளுணர்வில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அப்போது அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகும். மனம் அத்தூய்மையான நிலையில் இவ்வுலகம் முழுமைக்கும் வாழ்வு தரும் நிறைநிலையைப் பெறுகிறது.
வேதாத்ரி மகரிஷி

Our Apps Available On

Dinamalar

Follow us